» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
போதை, வன்முறை பாடல்களுக்கு தடை: ரேடியோ சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
வெள்ளி 2, டிசம்பர் 2022 5:13:52 PM (IST)
போதைப்பழக்கம், வன்முறையை ஊக்கப்படுத்தும் பாடல்களை ரேடியோ நிலையங்கள் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரேடியோ நிலையங்கள் கிராண்ட் ஆப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும். இந்த ஒப்பந்தங்களின்படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் ரேடியோவில் ஒலிபரப்பக் கூடாது.
இதை மீறினால் அந்த ரேடியோ நிலையங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளது. சில ரேடியோ சேனல்கள் மது, போதைப் பொருள், ஆயுதங்கள், கும்பல் மற்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் பாடல்களை ஒலிபரப்பு செய்வதை தொலைத்தொடர்பு அமைச்சகம் கண்டறிந்ததை அடுத்து இந்த அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது : பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் உரை!
புதன் 1, பிப்ரவரி 2023 11:21:07 AM (IST)

பாலியல் பலாத்கார வழக்கில் ஆசரம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:08:58 PM (IST)

ஆந்திராவின் தலைநகர் விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 3:44:25 PM (IST)

திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் இந்தியா செயல்பட்டு வருகிறது : குடியரசு தலைவர்
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:48:12 AM (IST)

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதைவிட மரணம் மேலானது: நிதீஷ் குமாா் பேட்டி!
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:35:45 AM (IST)

இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே யாத்திரையின் நோக்கம் - ராகுல்காந்தி
திங்கள் 30, ஜனவரி 2023 5:18:14 PM (IST)

தமிழன்Dec 5, 2022 - 03:21:18 PM | Posted IP 162.1*****