» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அத்துமீறிய 2பேர் கைது : மும்பை போலீஸுக்கு தென்கொரிய யூடியூபர் நன்றி!

வியாழன் 1, டிசம்பர் 2022 4:59:48 PM (IST)

தென்கொரிய நாட்டைச் சேர்ந்த யூடியூபரான இளம்பெண்ணிடம் அத்துமீறிய இருவரை மும்பை போலீஸார் கைது செய்தனர். 

மும்பை கார் பகுதியில் நேற்றிரவு தென் கொரியாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர்கள் இருவர் அந்தப் பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆவேசம் அடந்த அந்தப் பெண் அந்தப் பெண் அங்கிருந்து வேக வேகமாக நகர்கிறார். அவர் முகத்தில் பதற்றமும் அதிர்ச்சியும் அப்பட்டமாக தெரிகிறது. அழுகையை மறைத்து நடப்பதுபோல் நகர்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியானது. பாதிக்கப்பட்ட பெண்ணே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ''தான் தெரியாத நபர்களுடன் சகஜமாக பேசியிருக்கக் கூடாது'' என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும் மும்பை காவல் துறையை டேக் செய்தனர். வெளிநாட்டவருக்கு இதுபோன்ற சம்பவம் நேரக் கூடாது. நம் நாட்டுக்கு வந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அந்தப் பெண் மும்பை போலீஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில், ''இது இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நடக்கிறது. இந்தியர்கள் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் உள்ளவர்களைப் போல் அழகானவர்கள்'' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory