» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆசிய பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தபோதும் புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு!

திங்கள் 28, நவம்பர் 2022 12:34:25 PM (IST)

ஆசிய பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தபோதும் மும்பை பங்கு வர்த்தகம் இன்று புதிய உச்சம் தொட்டு சென்செக்ஸ் குறியீடு 62,498 புள்ளிகளை அடைந்திருந்தது.

ஆசிய பங்கு சந்தைகளில் வார தொடக்க நாளான இன்று வர்த்தகம் குறைந்தே காணப்பட்டது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, அதன் தொடர்ச்சியாக அரசின் கொரோனா ஊரடங்கு அமல் மற்றும் அரசின் கொள்கைக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆகியவை எதிரொலியாக இந்த நிலை காணப்படுகிறது என கூறப்படுகிறது. பங்கு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.

எனினும், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு புதிய உச்சம் தொட்டு உள்ளது. இதன்படி, சென்செக்ஸ் குறியீடு 149.44 புள்ளிகள் அல்லது 0.24 சதவீதம் உயர்ந்து 62,498 புள்ளிகளாக இருந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு, தானியங்கி துறை இரண்டும் சென்செக்ஸ் மதிப்பில் 1% லாபத்துடன் காணப்பட்டன. எனினும் உலோக துறை சார்ந்த வர்த்தகம் சற்று பலவீனமடைந்து காணப்பட்டது.

தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு காலை 11 மணியளவில் 37 புள்ளிகள் அல்லது 0.20 சதவீதம் உயர்வடைந்து 18,549.85 புள்ளிகளாக இருந்தது. இவற்றில் 34 பங்குகள் குறியீட்டில் முன்னேற்றம் அடைந்து லாப நோக்குடன் காணப்பட்டன. எனினும் 16 பங்குகள் சரிவடைந்து காணப்பட்டது.

எஸ்.பி.ஐ. லைப், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பி.பி.சி.எல். ஆகியவை லாபத்துடன் இருந்தன. எனினும், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், எச்.டி.எப்.சி., ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவை சரிவடைந்து இருந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory