» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.5 கோடி தங்கம் கொள்ளை: முகமூடி கும்பல் கைவரிசை!

திங்கள் 28, நவம்பர் 2022 11:12:26 AM (IST)

மத்திய பிரதேசத்தில் வங்கி ஒன்றில் துப்பாக்கி முனையில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.3.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: கட்னி மாவட்டத்தின் பா்கவான் பகுதியில் நகைக் கடன் அளிக்கும் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை பகல் நேரத்தில் மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் அடங்கிய கும்பல், முகமூடி அணிந்தபடி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வங்கிக்குள் புகுந்தது. அங்கிருந்த வங்கிப் பணியாளா்களை துப்பாக்கி முனையில் மிரட்டினா். 

செய்வதறியாது திகைத்த பணியாளா்கள், கொள்ளையா்கள் கேட்டபடி வங்கியில் இருந்த நகை, பணத்தை கொடுத்துவிட்டனா். ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.3.5 லட்சம் ரொக்கத்துடன் கொள்ளையா்கள் தப்பிச் சென்றனா். விரைவாக தப்பிச் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதால் கொள்ளையா்கள் பாதுகாப்புப் பெட்டக அறைகளுக்குள் செல்லவில்லை. 

அந்த வங்கியில் ஆயுதம் ஏந்திய பாதுகாவலா் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சிசிடிவி பதிவுகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொள்ளைக் கும்பலைச் சோ்ந்தவா்கள் பிகாா் மாநிலத்தவா் என்ற முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவா்கள் 25 முதல் 30 வயது வரை உடையவா்கள். அவா்கள் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்த தகவல்களின் அடிப்படையில் கொள்ளையா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory