» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாட்னா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியைக் கொல்ல பிஎப்ஐ சதி திட்டம்? என்ஐஏ திடுக்‍கிடும் தகவல்!

சனி 24, செப்டம்பர் 2022 5:15:01 PM (IST)

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பாட்னா பொதுக்‍கூட்டத்தில் பிரதமர் மேடியை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தேசிய புலனாய்வு முகமை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சோ்த்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட புகாரின்பேரில், தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினா் இணைந்து நாட்டின் 15க்கும் மேற்பட்ட  மாநிலங்களில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் கடந்த வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் 106 பேரை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் பல முக்கியமான ஆவணங்கள், புத்தகங்கள், கணினிகள், மடிக்கணினிகள், கைப்பேசிகள் ஆகியவற்றை கைப்பற்றினா். சுமார் 200 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சோதனையின் போாது ஒட்டுமொத்த தொடர்புகளையும் கண்டறிய வேண்டும் என்பதற்காக, இந்த சோதனையில் ஈடுபடுள்ள அனைத்து அதிகாரிகளும் சோதனையின்போது அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் என்ஐஏ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிகார் மாநிலம், பாட்னாவில் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மேடியை பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும், இதற்காக ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சியை தகவலை வெளியிட்டுள்ளது. 

மேலும், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முக்கியமான இடங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாத குழுக்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை சேகரித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கேரளத்தில் கைது செய்யப்பட்ட சாதிக் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுகுறித்த தகவல் தெரியவந்ததாக தேதிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. 

மேலும், பல ஆண்டுகளாக இந்த அமைப்புகளால் ரூ. 120 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இவை பெரும்பாலும் ரொக்கமாக வசூலிக்கப்பட்டு நாடு முழுவதும் கலவரங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது, பிஎஃப்ஐ மற்றும் அதன் உறுப்பினர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

குற்றவியல் சதி மற்றும் "தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை" பிஎஃப்ஐ செயல்பாடுகள் என்று தேதிய புலனாய்வு முகமை குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, இந்தியா, எஸ்டிபிஐ கட்சியினர் மீதான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினா் இணைந்து நடத்திய நடவடிக்கைக்கு  'ஆபரேஷன் ஆக்டோபஸ்' என பெயர் வைக்கப்பட்டதாக என்ஐஏ தகவல்கள் தெரிவித்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory