» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காரின் பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்: மீறினால் அபராதம்!

வியாழன் 22, செப்டம்பர் 2022 4:40:12 PM (IST)

காரின் பின் இருக்கையில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட்டு அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்று இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அக்டோபர் 5 கடைசி தேதி என்று கூறியுள்ளது.

இந்திய தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்ததையடுத்து, இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்த விதிகளை விதித்துள்ளது. இது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory