» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் திருமணம்: முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து!

திங்கள் 5, செப்டம்பர் 2022 10:36:42 AM (IST)



கேரளம் மாநிலத்தின் இளம் எம்எல்ஏ சச்சின் தேவ் மற்றும் இந்தியாவின் இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரன் திருமணம் ஏகேஜி ஹாலில் எளிமையான முறையில் நடந்தது. 

கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் பாலுசேரி தொகுதியின் இளம் எம்.எல்.ஏ. சச்சின் தேவ்(28). இவர், இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில செயலாளராகவும் இருந்து வருகிறார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராகவும் சச்சின் தேவ் உள்ளார். இதேபோன்று, தனது 21 ஆவது வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பதவியேற்றவர் ஆர்யா ராஜேந்திரன். இதனால், ஆர்யா ராஜேந்திரன் 2020 இல் நாட்டின் முதல் இளைய மேயராக ஆன பிறகு உலகளாவிய புகழ் பெற்றார். 

இவர்கள் இருவரும் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் பாலசங்கோம் என்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் குழந்தைகளுக்கான அமைப்பிலும் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர்.  இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. இதற்கு இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் தங்கள் திருமணத் திட்டங்களை அறிவித்தது மற்றும் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடுவார்கள் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆர்யா ராஜேந்திரன் இரண்டு நாள்களுக்கு முன்பு சச்சின் தேவ் உடனான தனது திருமண அழைப்பிதழை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். மேலும், திருமணத்திற்கு வருகின்றவர்கள் அன்பளிப்பு(பரிசுகள்) எதுவும் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். ஒருவேளை யாராவது அன்பளிப்பு அளிக்க விரும்பினால் முதல்வரின்  பேரிடர் நிவாரண நிதி அல்லது கேரளித்தில் உள்ள சில அனாதை இல்லங்களுக்கு நன்கொடை வழங்குகுமாறு அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர். 

இந்நிலையில், இளவல்கள் இருவரின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை காலை ஏகேஜி ஹாலில் எளிமையான முறையில் நடந்தது.  இந்த திருமண நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் உள்பட அனைத்து மூத்த தலைவர்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கேரள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

சச்சின் தேவ் கூறுகையில், "கடந்த நான்கு ஆண்டுகளாக ஆர்யாவை எனக்கு தெரியும், இது நடக்கும் முன்பே நாங்கள் மிகவும் சிறப்பான நட்பைப் பகிர்ந்து கொண்டிருந்தோம். இருவரும் இந்திய மாணவர் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்றியவர்கள். இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் மிகவும் பொறுப்பான அரசியல் பதவிகளைக் கையாளும் நாங்கள், கட்சி மற்றும் வாக்காளர்களால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளுக்கு பாதிப்பு வரமால் குடும்பத்தை நடத்துவோம். "குடும்ப வாழ்க்கை தடையாக இருக்காது” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

எங்களுக்கு வாய்ப்பளித்த கட்சிக்கும், வாக்களித்த மக்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் இருவரும் எளிமையான திருமணத்தை விரும்பினோம். இரண்டு குடும்பங்களுடனும் ஓணம் கொண்டாட்டங்களை கொண்டாடுவதைத் தவிர, எங்களிடம் எந்த திட்டமும் இல்லை என்று சச்சின் கூறினார்.

இவர்களுக்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory