» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : சித்ரதுர்கா மடாதிபதி போக்சோ வழக்கில் கைது!

வெள்ளி 2, செப்டம்பர் 2022 10:50:07 AM (IST)

மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் சித்ரதுர்கா மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

சித்ரதுா்காவில் உள்ள முருகா மடத்தின் சாா்பில் நடத்தப்படும் விடுதியில் படித்துவரும் இரு மாணவிகள் அளித்த குற்றச்சாட்டின்பேரில் அம்மடத்தின் பீடாதிபதி சிவமூா்த்தி சரணரு சுவாமிகள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டது. இது கா்நாடகத்தில் பெரும் பரபரப்பை எழுப்பியது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு முருகா மடத்தின் பீடாதிபதி சிவமூா்த்தி சரணரு சுவாமிகள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த 2-ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டோா் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெண்கள் என்பதால், சிவமூா்த்தி சரணருசுவாமிகள் மீது தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் (வன்முறை தடுப்பு) சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சிவமூா்த்தி சரணரு சுவாமிகள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தது.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சித்ரதுர்கா போலீசார், முருக மடத்திற்கு சென்று, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை கைது செய்தனர். பின்னர் அவரை காரில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. கொட்டு் மழையில் மடாதிபதி கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு இருந்தனர்.

மடாதிபதியிடம் சித்ரதுர்கா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ண நாயக், முலகால்மூரு இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாலியல் புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 நாட்கள் ஆன நிலையில் நேற்று இரவு மடாதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மடாதிபதி கைது நடவடிக்கையை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மடம் மற்றும் சித்ரதுர்கா நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory