» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

துர்கா பூஜைக்கு கலாசார பாரம்பரிய அங்கீகாரம் : யுனெஸ்கோவுக்கு நன்றி தெரிவித்து பேரணி!

வியாழன் 1, செப்டம்பர் 2022 5:11:34 PM (IST)



துர்கா பூஜையை கலாசார பாரம்பரியப் பட்டியலில் இணைத்து அங்கீகாரம் வழங்கிய யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி தெரிவித்து மேற்குவங்கத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 
 
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை சிறப்பாகக் கொண்டாட மாநில அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், மேற்குவங்கத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு கலாசார பாரம்பரிய அந்தஸ்து கொடுத்துள்ளது. கலாசார விழாக்கள் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்தியுள்ளது.

இதையடுத்து யுனெஸ்கோவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மேற்குவங்கத்தில் ஜோராசாங்கோ பகுதியில் இருந்து கொல்கத்தாவின் சிவப்பு சாலை வரை இன்று மெகா பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்த பேரணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். முன்னதாக இந்த பேரணியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கருப்பு உடை, கருப்பு பொருள்கள் எதுவும் இடம்பெறக்கூடாது என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory