» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெற்றி!

வியாழன் 1, செப்டம்பர் 2022 4:21:34 PM (IST)

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெற்றி பெற்றார்.

டெல்லி ஆளுநரை பதவி விலக வலியுறுத்தி ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும், மதுவிலக்கு கொள்கை மூலம் ஊழல் செய்ததாகக் கூறப்படும் புகாரில் சிக்கியிருக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி சட்டப்பேரவையில் விடிய விடிய போட்டி போராட்டம் நடத்தியிருந்த நிலையில், கேஜரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 58 வாக்குகள் பெற்று கேஜரிவால் வெற்றி பெற்றார். 70 உறுப்பினா்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனா். இன்றைய வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 58 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

மீதமுள்ள நான்கு பேரில், பேரவைத் தலைவர் கனடாவில் உள்ளதால், துணை பேரவைத் தலைவர் அவை நடவடிக்கைகளை மேற்கொண்டார். மீதமுள்ல இருவரில், எம்.எல்.ஏ. நரேஷ் பல்யான் ஆஸ்திரேலியாவிலும், சத்யேந்திர ஜெயின் சிறையிலும் உள்ளதால் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அப்போது முதல்வர் கேஜரிவால் பேசியதாவது: "துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரது வீடு, வங்கி கணக்குகளில் சோதனை செய்த சிபிஐ எதையும் கைப்பற்றவில்லை. சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக, குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மியின் வாக்கு சதவிகிதம் 4ஆக இருந்தது. ஆனால், தற்போது 6-ஆக அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்டால் மேலும் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். எனது இரண்டு குழந்தைகளும் ஐஐடியில் படித்தார்கள். அதேபோல், நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory