» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அசாமில் பயங்கரவாதிகள் நடத்தி வந்த மதரஸா இடிப்பு: மாநில அரசு நடவடிககை!

புதன் 31, ஆகஸ்ட் 2022 5:13:53 PM (IST)



அசாமில் வங்கதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்  கைதானதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திவந்த மதரஸா இன்று அரசால் இடிக்கப்பட்டது.

அசாமில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த அன்சாருல் இஸ்லாம் இயக்க பயங்கரவாதிகள் 37பேர் கைதாகியுள்ளனர். அதில் முக்கியமானவரான முஸ்தபா என்பவர், மோரிகான் மாவட்டத்தின் சோஹோரியா கிராமத்தில் மதரஸா நடத்தி வந்துள்ளாா். இவா், அன்சாருல் இஸ்லாம் இயக்கத்தின் நிதி பரிவா்த்தனைகள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளில் தொடா்புடையவா் என்று தெரியவந்துள்ளது.

இதனால், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோரிகான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அபா்ணா நடராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டு வந்த மர்கசுல் மா-ஆரிஃப் குவாரியானா மதரஸா  இன்று அம்மாநில அரசால் இடிக்கப்பட்டது. இது அசாமில்  3-வது மதரஸா இடிப்பு ஆகும்.

மேலும், பயங்கரவாதிகள் கைது குறித்து மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வா சா்மா கூறுகையில், ‘அஸ்ஸாமில் அன்சாருல் இஸ்லாம் இயக்க பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, அவா்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பயனாக, 2 பயங்கரவாத குழுக்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்றாா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory