» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சாக கொண்டாட்டம்: பிரதமர் வாழ்த்து

புதன் 31, ஆகஸ்ட் 2022 12:18:44 PM (IST)



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட செய்தியில், "விநாயகரின் ஆசிர்வாதத்துடன், அனைவரின் வாழ்விலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி இருக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல், பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், "அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். விநாயகரின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory