» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புதுமைப்பெண் திட்டம் துவக்க விழா: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தமிழக அரசு அழைப்பு

செவ்வாய் 30, ஆகஸ்ட் 2022 12:25:30 PM (IST)



புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ள டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி மூன்று புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. அதன்படி 15 மாதிரி பள்ளிகள், 26 சீர்மிகு பள்ளிகள், கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள உள்ளார்.  சென்னை பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 

மேலும், விழாவில் சிறந்து விருந்தினராக பங்கேற்கவுள்ள கெஜ்ரிவால் 15 மாதிரி பள்ளிகள், 28 சீர்மிகு பள்ளிகளை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், விழாவில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து உள்ளார். இதுகுறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தமிழகத்திற்க்கு வர அழைப்பு விடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. கல்விப் புரட்சியை நோக்கிய பயணத்தில் தமிழக மக்களுடன் இணைந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கல்வி புரட்சி பயணத்தில் தமிழக மக்களுடன் இணைவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory