» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் தீபாவளி முதல் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை: முகேஷ் அம்பானி அறிவிப்பு

திங்கள் 29, ஆகஸ்ட் 2022 4:13:17 PM (IST)

இந்தியாவில் தீபாவளி முதல் 5 ஜி சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

ஜியோ நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (ஆக.29) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, வரும் தீபாவளி முதல் 5 ஜி சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக நான்கு நகரங்களில் 5 ஜி சேவை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் தீபாவளி பண்டிகை முதல் 5 ஜி சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இது தொடர்பாக பேசிய முகேஷ் அம்பானி, தீபாவளி பண்டிகை முதல் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக 4 நகரங்களில் வழங்கப்படுகிறது. டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் 5ஜி சேவை வழங்கப்படும். அடுத்த 18 மாதங்களுக்குள் 100 மில்லியன் வீடுகளை அதிவேக இணைய பயன்பாட்டின் மூலம் இணைக்க திட்டமிட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory