» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசியக் கொடியை ஏந்த மறுத்த பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா! - எதிர்க்கட்சிகள் விமர்சனம்!!

திங்கள் 29, ஆகஸ்ட் 2022 11:14:35 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் வெற்றிக் கொண்ட்டாட்டத்தில் கையில் தேசியக் கொடியை ஏந்த பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா மறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் வெற்றிக் கொண்ட்டாட்டத்தில் கையில் தேசியக் கொடியை ஏந்த பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா மறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ள ஜெய் ஷா, அனைத்து அணிகளுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பதால் தான் இந்தியத் தேசியக் கொடியை வாங்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.  இதே வீடியோவைப் பகிர்ந்த மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியும், உள் துறை அமைச்சரின் மகன் ஏன் தேசியக் கொடியை ஏந்த மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் ஒருவர், "இதுவே பாஜகவைச் சாராத நபர் ஒருவர் இந்தியக் கொடியை ஏந்த மறுத்திருந்தால் பாஜக தொழில்நுட்ப பிரிவு சுறுசுறுப்பாகி சம்பந்தப்பட்ட நபரை தேச விரோதி என்று கூறியிருக்கும். மோடி ஆதரவு ஊடகங்களுக்கு நாள் முழுவதும் விவாத மேடைகளை நடத்தியிருக்கும். அதிர்ஷ்டவசமாக அது ஷாஷின்ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகிவிட்டார்" என்று கிண்டல் தொணியில் பதிவிட்டுள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory