» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு 21,000 டன் உர வகைகளை வழங்கிய இந்தியா!

திங்கள் 22, ஆகஸ்ட் 2022 5:27:05 PM (IST)



பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்திய அரசு 21,0000 டன் உர வகைகளை வழங்கியுள்ளது.  

கரோனா தொற்றுக்குப் பிறகு இலங்கையின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்தது .  2.2 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் அல்லல்பட்டு வருகின்றனா். அண்டை நாடுகளுக்கு இந்திய அரசு எபோதும் உதவும். அந்த வகையில் தற்போது இலங்கைக்கு 21000 டன் உர வகைகளை வழங்கியுள்ளது.  

இலங்கையிலுள்ள இந்தியாவின் தூதரக அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: நட்பு மற்றும் ஒத்துழைப்பில் மேலும் வலுவை கூட்டுவது போல இந்தியா தற்போது 21,000 டன் உர வகைகளை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த மாதம் 44,000 டன் வழங்கியதைத் தொடர்ந்து இந்திய மொத்தமாக 2022இல் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உதவி புரிந்துள்ளது. இந்த உரங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் இலங்கை விவசாயிகளுக்கு உதவும். இது இந்தியாவுடன் இணைந்திருக்கும் இலங்கை மக்களுக்கும் இந்தியாவுக்குமான இருதரப்பு மக்களுக்கும் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் கூட்டு பலனாகும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory