» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் கனமழை: நிலச்சரிவு, பெருவெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலி

ஞாயிறு 21, ஆகஸ்ட் 2022 9:07:02 AM (IST)



இமாச்சல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பால் பெய்த கனமழையின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்தனர். 

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக மழை பெய்து வருவதால், ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்ததால், பல்வேறு ஆறு, கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் ஒரு சில இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. 

இதனால் குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவு பெற்றதால் குறிப்பிட்ட இடங்களில் மலைச்சரிவும் ஏற்பட்டது. இதில் மாநிலத்தின் காங்க்ரா, மாண்டி, ஹமீர்பூர் மாவட்டங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அப்பகுதிகளில் கனமழையும் கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல் மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தாழ்வான இடங்கள் பெரும்பாலும் வெள்ளத்தில் மூழ்கி அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது. 

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கிருந்த பல வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் மண்டியாவில் உள்ள ஒரு இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர். இதேபோல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், மலைச்சரிவில் சிக்கியும் இங்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் மாண்டியாவில் மட்டும் 13 பேர் பலியாகினர். இதேபோல் காங்க்ரா, ஹமீர்பூர் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 9 பேர் பலியாகினர். ஒரே நாளில் பெய்த கனமழையால் மாநிலத்தில் 22 பேர் பலியாகினர்.

இதேபோல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நிலச்சரிவின் காரணமாக மாநிலத்த்ல் உள்ள பல சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும், பல சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பபட்டுள்ளது. குறிப்பாக மாண்டி மாவட்டத்தில் உள்ள மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஷோகியில் சிம்லா-சண்டிகத் நெடுஞ்சாலை உட்பட 743 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory