» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொடர்ந்து 17 மணிநேரம் விமானம் இயக்கி சாதனை: அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பிடித்த விமானி!

சனி 20, ஆகஸ்ட் 2022 5:06:29 PM (IST)



தொடர்ந்து 17 மணிநேரம் விமானத்தை இயக்கி சாதனை புரிந்த இந்தியாவைச் சேர்ந்த சோயா அகர்வால் என்ற பெண் விமானி அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளார்.

வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரை கிட்டத்தட்ட 17 மணி நேரம் தொடர்ச்சியாக பயணம் செய்து பெண் விமானிகள் குழு சாதனை படைத்துள்ளது.  மொத்த பயண தூரமான 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடந்து சாதனை படைத்த பெண் விமானிகள் குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஜோயா அகர்வால். 

இந்த சாதனையின் காரணமாக அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் ஜோயா அகர்வால் இடம்பெற்றுள்ளார். விமான ஓட்டியின் அற்புதமான வாழ்க்கைக்காகவும், உலகெங்கிலும் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் அவருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற விமான அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக நான் இருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று ஜோயா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory