» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழவதும் 10 நாள்களில் 1 கோடி தேசியக் கொடிகளை விற்பனை செய்த அஞ்சல் துறை

வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 4:08:23 PM (IST)

நாடு முழவதும் 10 நாள்களில் 1 கோடி தேசியக் கொடிகளை அஞ்சல் துறை விற்பனை செய்துள்ளது.

இந்திய அஞ்சல் துறை மூலம் 10 நாள்களுக்குள் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மற்றும் இணையதளம் வாயிலாக குடிமக்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகளை விற்பனை செய்துள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசியக் கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இணையதளத்தின் மூலம் பதிவு  செய்பவர்களுக்கு இலவசமாக தேசியக் கொடிகள் விநியோகிக்கப்படுகிறது. இணையதளம் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் குடிமக்களுக்கு தேசியக் கொடிகளைக் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதற்கு நாடு முழவதும் 4.2 லட்சம் அஞ்சல் ஊழியர்கள் உதவி செய்கிறார்கள் என தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory