» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்வு: வீடு, வாகனம், தனி நபர் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும்!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 11:11:15 AM (IST)

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 

நாட்டில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.  இதன் மூலமாக வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம், 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வை அடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். மேலும், 2022-23 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% ஆக தொடர்ந்து நீடிக்கும், 2023-24 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory