» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
75வது ஆண்டு சுதந்திர தின விழா: பிரதமர் மோடியைத் தொடர்ந்து ராகுல் ட்விட்டர் முகப்புப் படம் மாற்றம்!
வியாழன் 4, ஆகஸ்ட் 2022 10:21:53 AM (IST)

75 ஆண்டுகள் சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை தங்கள் சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படங்களாக வைக்கக் கோரினார். தங்களின் வீடுகளில் ஆகஸ்ட் 13- 15 வரை ஆகிய 3 நாள்கள் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன சுதந்திர நாளையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார். தனது படத்தை நீக்கிவிட்டு, முன்னாள் பிரதமர் நேரு தேசியக் கொடியை ஏந்தியவாறு உள்ள படத்தை முகப்பில் மாற்றியுள்ளார்.
மேலும், சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், மூவர்ணக் கொடி நாட்டின் பெருமை. அது இந்தியக் குடிமக்கள் அனைவரின் இதயத்திலும் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது முகநூல், ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படங்களை மாற்றிய நிலையில், ராகுல் காந்தியும் இன்று மாற்றியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜபேயி 4ஆம் ஆண்டு நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:44:41 AM (IST)

ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியாவின் இருபெரும் சவால்கள்: பிரதமர் மோடி
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 12:32:51 PM (IST)

இந்தியாவின் புதுநம்பிக்கையின் ஊற்றாக பெண்கள் இளைஞர்கள் விளங்குகின்றார்கள்: ஜனாதிபதி உரை
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:46:08 AM (IST)

ராஜஸ்தானில் ஒரு கோடி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடி உலக சாதனை
சனி 13, ஆகஸ்ட் 2022 12:46:55 PM (IST)

நாடு முழவதும் 10 நாள்களில் 1 கோடி தேசியக் கொடிகளை விற்பனை செய்த அஞ்சல் துறை
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 4:08:23 PM (IST)

சுதந்திர தின விழா : அதிகமான மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:47:22 PM (IST)
