» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அக்னிபாதை திட்டத்தில் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
சனி 2, ஜூலை 2022 12:00:55 PM (IST)
அக்னிபாதை திட்டத்தில் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன. இத்திட்டத்தை கைவிடும்படி எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில், திட்டத்தை கைவிட முடியாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும், அக்னவீரர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தொடர்ந்து அறிவித்து வருகிறது. இதனிடையே விமானப்படைக்கான அக்னிவீரர்கள் தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. இதில், நேற்று வரையில் 2.72 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ராணுவம், கடற்படைக்கான அக்னிவீரர்கள் தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவும் நேற்று முதல் தொடங்கியது. இது தொடர்பாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கடற்படை, ராணுவத்துக்கான அக்னிவீரர் தேர்வு ஜூலை 1 முதல் தொடங்குகிறது. ராணுவத்தில் இணைந்து, நாட்டுக்கு அக்னிவீரர்களாக சேவையாற்றும் உங்கள் கனவை நனவாக்குங்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக அலுவலக சாவி வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 12:42:32 PM (IST)

5ஜி அலைக்கற்றை ஏலம்: மத்திய அரசுக்கு ரூ.8,312 கோடி செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:26:22 AM (IST)

இந்தியாவின் தடுப்பூசிகள் ஒட்டுமொத்த உலகுக்கும் வினியோகம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 10:21:47 AM (IST)
_1660798139.jpg)
கண்ணியமாக நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 10:18:40 AM (IST)

டெல்லியில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
புதன் 17, ஆகஸ்ட் 2022 12:20:05 PM (IST)

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 7பேர் உயிரிழப்பு!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 4:50:42 PM (IST)
