» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆன்மிக சுற்றுலாவில் சோகம்: மரத்தில் வேன் மோதியதில் 10பேர் பலி - 7பேர் படுகாயம்!

வியாழன் 23, ஜூன் 2022 12:49:03 PM (IST)

உத்தரப்பிரதேசத்தில் மரத்தின் மீது வேன் மோதிய கோர விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் கடந்த வாரம் ஹரிதுவாருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். ஹரிதுவாரில் உள்ள கோயில்கள் உள்ளிட்ட புனிதத் தலங்களில் வழிபட்ட அவர்கள், நேற்று மாலை அங்கிருந்து ரயிலில் புறப்பட தயாராக இருந்தனர். ஆனால், கனமழை பெய்ததன் காரணமாக உரிய நேரத்தில் அவர்களால் ரயில் நிலையத்துக்கு செல்ல முடியவில்லை. 

இதையடுத்து, இரவு நேரத்தில் அங்கு வந்த ஒரு வேனில் ஏறி அவர்கள் லக்கிம்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பிலிபிட் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்த பெரிய மரத்தின் மீது அவர்களின் வேன் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த ஓட்டுநர் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்தை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory