» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிப்பு
செவ்வாய் 21, ஜூன் 2022 5:15:45 PM (IST)
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்த யஷ்வந்த் சின்கா, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது ராஜினாமா கடிதத்தை திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி இருந்தார். அதனை உறுதி செய்யும் வகையில் ட்வீட் ஒன்றும் அவர் செய்திருந்தார். அதில் எதிர்க்கட்சிகளின் நலனுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜக தரப்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் வெகு விரைவில் உறுதி செய்யப்படுவார் எனத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வரும் ஜூன் 29-ஆம் தேதி கடைசி தேதியாகும். தேவைப்படும் பட்சத்தில் ஜூலை 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை: திருவனந்தபுரம் அருகே சோகம்!
சனி 2, ஜூலை 2022 5:46:56 PM (IST)

டெல்லியில் இருந்து ஜபல்பூர் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை: பயணிகள் பீதி!!
சனி 2, ஜூலை 2022 4:48:33 PM (IST)

உதய்பூர் படுகொலையில் கைதானவர் பாஜக உறுப்பினர்: காங்கிரஸ் புகார் - பாஜக மறுப்பு!
சனி 2, ஜூலை 2022 3:44:12 PM (IST)

அக்னிபாதை திட்டத்தில் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
சனி 2, ஜூலை 2022 12:00:55 PM (IST)

பிரதமர் மோடியை 3வது முறையாக புறக்கணித்த சந்திரசேகர் ராவ்: சின்ஹவுக்கு வரவேற்பு!
சனி 2, ஜூலை 2022 11:56:08 AM (IST)

வயநாட்டில் அடித்து நொறுக்கப்பட்ட எம்பி அலுவலகம் : ராகுல் காந்தி பார்வையிட்டார்
வெள்ளி 1, ஜூலை 2022 5:28:24 PM (IST)
