» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை : பூஜை செய்து மர்ம நபர்கள் கைவரிசை!!

செவ்வாய் 17, மே 2022 4:36:29 PM (IST)

கொல்லம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில்  ரூ.5 லட்சம் பணமும், ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் பத்மநாபபுரம் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று  இரவு வழக்கம் போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு ராமச்சந்திரனும் ஊழியர்களும் வீடு திரும்பினார்கள். இன்று காலை ராமச்சந்திரன் மற்றும்  ஊழியர்கள்  இருவர் நிறுவனத்தை திறப்பதற்காக சென்றார்கள். திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த பூஜை அறையில் மதுபானம் மற்றும் வெத்தலை, பாக்கு, எலுமிச்சம்பழம் ஆகியவை வைத்து பூஜை செய்தது தெரிந்தது. 

பின்னர், ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் 2வது மாடிக்கு சென்று பார்த்தார்கள். அங்கு மாடியின் ஒரு பகுதியிலுள்ள கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அங்கு 2 லாக்கர் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த  ரூ.5 லட்சம் பணமும், ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும்  கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது . அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் புனலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory