» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வீட்டின் தனி அறையில் 22 நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன்- பெற்றோர் மீது வழக்கு!

சனி 14, மே 2022 11:40:12 AM (IST)

புனேயில் தனி அறையில் 20க்கும் மேற்பட்ட நாய்களுடன் 11 வயது சிறுவனை அடைத்து வைத்த பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

புனே கோந்துவா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே 11 வயது சிறுவன் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இருப்பதையும், அவனுடன் அங்கு பல நாய்கள் இருந்ததையும் நபர் ஒருவர் கண்டார். மேலும், சிறுவன் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதை அறிந்த நபர் இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியை தொடர்புகொண்டு விவரத்தை தெரிவித்தார். 

இதன்பேரில் கடந்த 9-ந் தேதி அதிகாரி ஒருவர் சிறுவன் வீட்டிற்கு சென்றபோது, 20 முதல் 22 நாய்களுடன் சிறுவன் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.  மேலும் வீட்டில் இருந்து பயங்கர தூர்நாற்றமும் வீசியது. இதையடுத்து அதிகாரி சிறுவனை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory