» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி இந்தியா கேட் பகுதியில் சுபாஷ் சந்திர போஸ் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு!

வெள்ளி 21, ஜனவரி 2022 5:37:48 PM (IST)டெல்லி இந்தியா கேட் பகுதியிலிருந்து அமர் ஜவான் ஜோதி நீக்கப்பட்ட நிலையில் அங்கு நேதாஜிக்கு சிலை வைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி இந்தியா கேட் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களை கௌரவிக்கும் விதமாக அமர் ஜவான் ஜோதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த நிலையில் தற்போது அதை இடம் மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதிக்கு பதிலாக இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி கிரானைட்டில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory