» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலகின் மிக பிரபலமான தலைவர்களின் பட்டியல்: பிரதமர் மோடி முதலிடம்!

வெள்ளி 21, ஜனவரி 2022 3:28:01 PM (IST)

'தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். 

தி மார்னிங் போஸ்ட்  தகவலின் படி, உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 71 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 66 சதவிகித பேர் ஆதரவுடன் 2-வது இடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதில் 43 சதவிகிதம் ஆதரவு பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவிகிதம் ஆதரவை பெற்று 13-வது இடத்தில் (கடைசி இடம்) உள்ளார். 

தி மார்னிங் கன்சல்ட் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் மோடிக்கு 84 சதவிகிதம் ஆதரவு கிடைத்தது. அதேபோன்று கடந்த ஆண்டு மே மாதத்தில் 63 சதவிகிதமாக சரிந்து, தற்போது 71 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி முதல் 18 ம் தேதி வரையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

SuperJan 22, 2022 - 04:55:09 PM | Posted IP 108.1*****

85./. Of the world population doesn’t know who is Mr. Modi. Even in India, only 30./. People supported his party. How come he is more popular in the world. From this, one can understand the quality of this survey.😂

S.KANNANJan 22, 2022 - 12:25:40 PM | Posted IP 108.1*****

GOOD

UnmaiJan 22, 2022 - 07:54:32 AM | Posted IP 173.2*****

Paid advertisement

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory