» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தந்தை சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வெள்ளி 21, ஜனவரி 2022 12:37:19 PM (IST)

தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்ற சட்டம் 1956-ம் ஆண்டுக்கு முன்னரும் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

கடந்த 1956-ம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி,  மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது. இதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 6-ல்,  திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலா என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், ’1956-ம் ஆண்டுதான் வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாகவே குடும்ப தலைவர் இறந்து விட்டால், அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும் தான் சொத்து செல்லுமா அல்லது மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என கோரினார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் பல கட்டங்களாக விசாரித்து வந்த நிலையில், நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘1956-ல் வாரிசுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு முன்பாக இறப்பு ஏற்பட்டு இருந்தாலும் தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு’ என அறிவித்தனர்.


மக்கள் கருத்து

ganesanFeb 1, 2022 - 08:29:42 PM | Posted IP 162.1*****

சட்டங்கள் திருத்த பட வேண்டும்

kumarJan 22, 2022 - 11:30:25 AM | Posted IP 173.2*****

theerpukal thiruthappada vendum

ganesanJan 21, 2022 - 04:57:32 PM | Posted IP 162.1*****

தந்தையின் சொத்தில் மகளுக்கு பங்கு ஏற்றுக்கொள்கிறோம். தந்தை தனது சம்பாத்தியம் மற்றும் சொத்துக்களை எல்லாம் விற்று மகளை படிக்க வைத்து, மகள் நல்ல வேலை பார்த்து சம்பாதிக்கிறார் திருமணமாகிவிட்டது மகள் அவருடைய சம்பாத்தியத்தில் சொத்துக்கள் வாங்குகிறார். தந்தை உயிருடன் இருக்கும் போது, விபத்து/நோய் காரணமாக மகள் இறந்து விடுகிறார், அந்த தந்தைக்கு மகன் கிடையாது அந்த மகள் மட்டும் தான் இந்த சூழ்நிலையில் தனது கடைசி காலத்தில் மகளை நம்பியிருந்த தந்தை இறந்த மகளின் வாரிசு சான்றிதழ் இல் வருவாரா? கணவர் மற்றும் இறந்த மகளின் பிள்ளைகள் மட்டும் இறந்த மகளின் வாரிசு சான்றிதழ் இல் இருக்குமா? கணவர் மற்றும் இறந்த மகளின் பிள்ளைகள் மட்டும் இறந்த மகளின் வாரிசு சான்றிதழ் இல் இருந்தால், கணவர் வீட்டார் அந்த இறந்த மகளின் தந்தைக்கு சொத்தில் பங்கு கொடுக்க மாட்டார்கள் தந்தை தனது சம்பாத்தியம் மற்றும் சொத்துக்களை எல்லாம் விற்று மகளை படிக்க வைத்த தந்தையின் கடைசி காலம்?

adaminJan 21, 2022 - 01:07:41 PM | Posted IP 162.1*****

athu pasanga illana murugesa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory