» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ரூ.50 கோடி போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல்!

வியாழன் 13, ஜனவரி 2022 12:21:25 PM (IST)

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான  போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜன.12) ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில்  பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.50 கோடி மதிப்பிலான 7.4 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

மேலும், துப்பாக்கி மற்றும் குண்டுகள் ஆகியவற்றையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். முன்னதாக கடந்த டிச.26 ஆம் தேதி ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Black Forest Cakes

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory