» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத மிரட்டல் : கவுதம் காம்பீர் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

புதன் 24, நவம்பர் 2021 11:12:38 AM (IST)

ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி மத்திய மாவட்ட போலீஸ் கமிஷனர் கூறுகையில், "கவுதம் காம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து இ மெயில் வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனால், அவர் வீட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

கவுதம் காம்பீர் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவ்வப்போது பரபரப்பான அரசியல் கருத்துகளை வெளியிடுவது அவரது வழக்கம். சில நேரங்களில் அது சர்ச்சையாகிவிடுவதும் உண்டு. இந்நிலையில், அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory