» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமருடன் ரஜினிகாந்த் சந்திப்பு

புதன் 27, அக்டோபர் 2021 3:25:34 PM (IST)



தாதாசாகேப் பால்கே விருது பெற்றபின் பிரதமர் மோடியையும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், தாதாசாகேப் பால்கே விருது பெற்றபின் பிரதமர் மோடியையும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுடன் சந்திப்பு மேற்கொண்டபோது எடுத்த புகைப்படத்தையும் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory