» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அனல் மின் நிலையங்களில் நிலக்கரிக்கு பற்றாக்குறையா ? மத்திய அரசு விளக்கம்

ஞாயிறு 10, அக்டோபர் 2021 8:13:34 PM (IST)

அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

நாட்டின் மின் உற்பத்தி 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ள நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. அக்டோபர் 4-ம் தேதி  கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால், பல்வேறு மாநில முதல் மந்திரிகளும்  நிலக்கரி பற்றைக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் மின் துறை அதிகாரிகளுடனான  ஆலோசனைக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய மின் துறை மந்திரி ஆர்.கே சிங் கூறியதாவது:   நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளது. 4 நாட்களுக்கு கையிருப்பு உள்ள நிலையில் தினமும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி நிரப்பப்படுகிறது. இதனால் மின் தட்டுப்பாடு வராது. நிலக்கரி இருப்பு தொடர்பாக நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை. இனியும் இருக்காது” என்றார். 

மேலும், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்தது குறித்துப் பேசிய ஆர்.கே சிங், காங்கிரஸ் கட்சிக்கு தற்போது வாக்குகளும் இல்லாமல் போய் விட்டது. இதனால் திட்டங்களும் இல்லாமல் போய்விட்டது” என்ற பொருளில் சாடியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes




Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory