» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் 1 முதல் 7ஆம் வகுப்புகளுக்கு அக்.1-ல் பள்ளிகள் திறப்பு : பினராயி விஜயன் அறிவிப்பு

வியாழன் 23, செப்டம்பர் 2021 10:43:50 AM (IST)

கேரளாவில் 1-ம் தேதி முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகள்  திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ம் தேதி முதல், 1 முதல் 7 வரை மற்றும் 10, 12-ம் வகுப்புகள் தொடங்கப்படும். 15-ம் தேதி முதல் மற்ற வகுப்புகள் ஆரம்பமாகும். இதையொட்டி பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதே போல் பள்ளி குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படும். முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. 

வியாபார நிறுவனங்கள், பொது இடங்களில் சிலர் முக கவசம் அணியாமல் இருப்பது தெரிய வந்தால் தண்டிக்கப்படுவார்கள். கேரளாவில் இதுவரை 3.44 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 24 லட்சம் பேர் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட எடுத்து கொள்ளவில்லை. கொரோனா பாதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 65 வயதிற்கு மேலானவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory