» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சனி 18, செப்டம்பர் 2021 11:32:38 AM (IST)



பெட்ரோலிப் பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் லக்னௌவில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், கரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூ.16 கோடி மதிப்பில் தசைநார் சிதைவு நோய்க்கு வழங்கப்படும் 2 மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 15%-லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு 5% வரி குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிப் பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பயோ டீசலுக்கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி, ஜொமாடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு டெலிவரிக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory