» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகர் சோனு சூட் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

வியாழன் 16, செப்டம்பர் 2021 3:28:59 PM (IST)

மும்பையில் பிரபல நடிகர் சோனு சூட் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை வருகிறது.

மும்பை ஜூஹூவில் அமைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் வீட்டிற்கு சென்றுள்ள வருமான வரித்துறையினர் நேற்று மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனை இரவு வரை நீண்டது. லக்னோவில் இயங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் சோனு சூட் மேற்கொண்ட சொத்து ஒப்பந்தம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோனு சூட்டுக்கு சொந்தமான தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் உள்பட ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். 

சோனு சூட்டுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஆண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டபோது புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு திரும்ப உதவியதன் மூலம் சோனு சூட் அனைவரின் கவனத்தையும் ஈா்த்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory