» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

திங்கள் 6, செப்டம்பர் 2021 4:35:26 PM (IST)

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட் 2021) வரும் செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாலை 5 முதல் விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கி, ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் செப்டம்பர் 12ஆம் தேதியே நடைபெறுவதால், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு சிலர் கேட்கிறார்கள் என்று 16 லட்சம் பேர் எழுதும் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்று கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory