» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆளில்லா விமானம் தயாரிப்பு: இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்!

சனி 4, செப்டம்பர் 2021 12:24:25 PM (IST)



ஆளில்லா விமானம் தயாரிப்பதில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு துறையில் நெருங்கிய ஒத்துழைப்பு நிலவி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், ‘மாபெரும் பாதுகாப்பு கூட்டாளி’ என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்தது. அதைத்தொடர்ந்து, இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஒருவர் மற்றவரது நாட்டு ராணுவ தளங்களை எரிபொருள் நிரப்பவும், பழுது பார்க்கவும் பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமும் அதில் அடங்கும். உயர் தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.

இந்நிலையில், வானில் ஏவப்படும் ஆளில்லா விமான தயாரிப்பில் ஒத்துழைப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சியின் கீழ் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கையில், இந்திய ராணுவ அமைச்சகமும், அமெரிக்க பாதுகாப்பு துறையும் கையெழுத்திட்டன. இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory