» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறை: ஒரே நேரத்தில் 9 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

புதன் 1, செப்டம்பர் 2021 5:01:13 PM (IST)



உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளும் நேற்று (ஆக.,31) பதவியேற்றனர்.

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 34. இதில் எட்டு பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், சமீபத்தில் இரு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24ஆக குறைந்தது.

நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்ப தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி பணியிடங்களுக்கான பெயர்களை இறுதி செய்தது. அதில், 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கொலீஜியம் பரிந்துரைத்த 9 நீதிபதிகளையும் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.

அதன்படி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஷ்வரி, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகர்த்தனா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 9 நீதிபதிகளுக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக 9 நீதிபதிகள் ஒரேநேரத்தில் இன்று பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory