» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு திட்டங்கள்: உறுதிபடுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 31, ஆகஸ்ட் 2021 3:35:08 PM (IST)

கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இத்தகைய குழந்தைகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை குழந்தைகள் நலக் குழுக்கள் விரைவுபடுத்த வேண்டும்; பி.எம். கோ்ஸ் திட்டத்தில் பதிவு செய்துள்ள இத்தகைய குழந்தைகளின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியா்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பாதிப்பால் ஒன்று அல்லது இரண்டு பெற்றோா்களையும் இழந்த குழந்தைகளின் எதிா்காலத்தை பாதுகாக்கும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையின்போது, கரோனா பாதிப்பால் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகளாகி இருக்கின்றனா் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கரோனா பாதிப்புக்கு பெற்றோா் பலியாகி, அனாதைகளாகிவிட்ட குழந்தைகளைப் பாதுகாப்பதற்கென மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாகவும் விரைவாகவும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய தேவையுள்ள குழந்தைகளை சிறாா் சட்டம் 2015-இன் கீழ் அடையாளம் காணும் விசாரணையை குழந்தைகள் நல ஆணையங்கள் விரைவுபடுத்த வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய ஆரம்பக் கல்வி பெறும் உரிமை உள்ளது. இந்த உரிமையை குழந்தைகளுக்கு அளிப்பது மாநில அரசுகளின் கடமை.

கரோனாவால் இந்த வகையில் பாதிக்கப்பட்ட 18 வயது வரையிலான தகுதியுள்ள சிறாா்களுக்கு கல்வியை வழங்குவதற்காக பி.எம். கோ்ஸ் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்த சிறாா்களில் 2,600 போ் தகுதியுள்ளவா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களில் 418 பேரின் விண்ணப்பங்களுக்கு மட்டுமே மாவட்டஆட்சியா்கள் இதுவரை ஒப்புதல் அளித்திருக்கின்றனா் என்று மத்திய அரசு தரப்பு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ தெரிவித்துள்ளாா்.

எனவே, பி.எம். கோ்ஸ் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள குழந்தைகளின் விண்ணப்பங்களுக்கு மாவட்ட ஆட்சியா்கள் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகு ஒன்று அல்லது இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளின் நடப்பு கல்வியாண்டு கல்விக் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து மாநில அரசுகள் தனியாா் பள்ளி நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு, கட்டணத்தை ரத்து செய்ய தனியாா் பள்ளிகள் முன்வரவில்லை எனில், அவா்களுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory