» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்

வியாழன் 26, ஆகஸ்ட் 2021 12:02:26 PM (IST)

உச்சநீதிமன்றத்துக்கு கொலீஜியம் பரிந்துரைத்த 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 34 என்ற நிலையில், சமீபத்தில் இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்றதால் தற்போது உச்சநீதிமன்றத்தில் பணியிலிருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை 24-ஆக குறைந்துள்ளது. இதனால், நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி பணியிடங்களுக்கான பெயா்களை இறுதி செய்து, 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பெயா்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. 

இதன்படி, கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமாா் மகேஷ்வரி, தெலங்கானா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகா்த்தனா, கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமாா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், உச்சநீதிமன்ற வழக்கறிஞா்கள் சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில், மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருமான பி.எஸ்.நரசிம்மாவின் பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு இந்த பரிந்துரையை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory