» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசிய சொத்துகளை குத்தகைக்கு விடுவதா? ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதன் 25, ஆகஸ்ட் 2021 4:33:25 PM (IST)

தேசிய சொத்துக்களை குத்தகைக்கு விடும் பாஜக அரசின் திட்டத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் விற்பனை செய்வது மோசமான செயல் என்றும் 42 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள மின்வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது பிரதமர் மோடியின் மோசமான திட்டங்களில் ஒன்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேபோல் நாட்டில் உள்ள 25 விமான நிலையங்கள், உணவு தானியக் கிடங்குகள் தனியாருக்கு விற்க பிரதமர் முடிவு செய்துவிட்டார் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான பல ஆயிரம் செல்போன் கோபுரங்களை தனியாருக்கு கொடுக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு என்பதையே ஒழிக்க பார்க்கிறது மத்திய பாரதிய ஜனதா அரசு என்றும் அரசின் இந்த செயல்பாடுகளை அம்பலப்படுத்துவது இளைஞர்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory