» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுநீரை கலந்து பாணிபூரி தயாரித்த வியாபாரி கைது

புதன் 25, ஆகஸ்ட் 2021 12:09:13 PM (IST)

கவுகாத்தியில் சிறுநீரை கலந்து பாணிபூரி தயாரித்த தள்ளுவண்டி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள அத்கான் என்ற இடத்தில் வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வந்தார். அங்கு பானிபூரி, சாட், வடபாவ், பாவ்பாஜி உள்ளிட்டவைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தார். தள்ளுவண்டியில் உணவுப் பொருட்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் ஊழியர்கள் அந்த உணவுகளை மற்றவர்களுக்கு வழங்கிக் கொண்டு இருந்தனர். அடுப்பில் பானிபூரிக்கான மசாலா தயாராகிக் கொண்டு இருந்தது.

அதில் தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக அங்கிருந்த பாத்திரத்தில் சிறுநீரை பிடித்து அதை அதில் ஊற்றி சமைத்தார். பின்னர் அந்த பாத்திரத்தை கழுவாமலேயே உணவுப் பொருட்களையும் அதில் போட்டு பரிமாறினார். இதை யாரோ மறைந்து இருந்து வீடியோ எடுத்தனர். அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். 20 வினாடி ஓடும் அந்த வீடியோ பரபரப்பாக பரவியது.

இதுபற்றி அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி அந்த வியாபாரியை கைது செய்தனர். தெருவோர கடைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது புதிது அல்ல. 2017-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள சேட்டன் நாஞ்சியில் ஒருவர் பானிபூரியில் சிறுநீரை கலந்ததால் அதற்காக அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு மும்பை கொல்காபூரில் பானிபூரி கடைக்காரர் கழிவறை தண்ணீரை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ஒருவன்Aug 26, 2021 - 09:45:01 AM | Posted IP 162.1*****

இதுதான் வடை நட்டு காரன், பீடா வாயன், குந்தி சாரி ஹிந்தி காரன் தமிழகத்தில் எங்கு ஓட்டல் வேலை இருந்தாலும், சொந்த ஓட்டலாக இருந்தாலும் அங்கு செல்வதை தவிர்க்கவும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory