» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் கட்டுக்குள் வராமல் அதிகரிக்கும் கரோனா- முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு!!

புதன் 25, ஆகஸ்ட் 2021 11:44:57 AM (IST)

கேரளாவில் கரோனா கட்டுக்குள் வராமல் அதிகரித்து வருவதால் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்ததுள்ளது. 

கேரளாவில் கரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றும் இங்கு 24 ஆயிரத்து 296 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கரோனா நோய் பாதித்த 173 பேர் மரணம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் 18.04 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்த கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. மொகரம் மற்றும் ஓணப்பண்டிகையையொட்டி இந்த ஊரடங்கில் அரசு  தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுகிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி வருகிற ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது: கரோனா 3-வது அலை பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.  இதனை எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது. பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து

tamilanAug 26, 2021 - 12:15:05 PM | Posted IP 108.1*****

எல்லா மாநிலங்களிலும் ஊரடங்கு இருந்த போது கேரள அரசு பெரிதாக ஊரடங்கை அமல்படுத்தவில்லை .அதன் பாதிப்பை இப்பொழுது அனுபவிக்கிறது .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory