» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆப்கானிஸ்தான் விவகாரம்: பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் பேச்சு

செவ்வாய் 24, ஆகஸ்ட் 2021 3:28:06 PM (IST)

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலீபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர். 

இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமும் குழப்பமும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு அமெரிக்கா தான் காரணம் என உலக நாடுகள் பலவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றதற்காக வருந்தவில்லை என்றும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் கூறி வருகிறார். 

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்கள்  இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில்,  இந்திய பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இரு தலைவர்களும் இன்று தொலைபேசி வாயிலாக பேசினர். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory