» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு விரைவில் ரூ.25,000 கோடி அளவுக்கு முதலீட்டை காணும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை

ஞாயிறு 22, ஆகஸ்ட் 2021 9:36:03 PM (IST)

ஜம்மு விரைவில் ரூ.25,000 கோடி அளவுக்கு முதலீட்டை காணும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். 

ஜம்மு ஐஐஎம் (இந்திய மேலாண்மை கழகம்) 5வது ஆண்டை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: குறுகிய காலத்தில், அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக, கரோனா பாதிப்புக்கு இடையிலும், இந்த கல்வி மையம் முத்திரை பதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீடு மற்றும் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் லடாக் ஆகியவற்றுக்கு அவர் அளித்த அதிக முன்னுரிமையால் இது சாத்தியமாகியுள்ளது. 

ஜம்மு விரைவில் ரூ.25,000 கோடி அளவுக்கு முதலீட்டை காணும், குறிப்பாக சுகாதாரத்துறையில் அதிக முதலீடு செய்யப்படும். இதன் மூலம் இப்பகுதி இளைஞர்களுக்கும், ஐஐஎம் மாணவர்களுக்கும் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகும்.  ஆனாலும், நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், புத்தாக்க தொடக்க நிறுவன முயற்சிகள் மூலம், வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory