» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 கருட சேவை நிகழ்ச்சி: தேவஸ்தானம் தகவல்

வெள்ளி 13, ஆகஸ்ட் 2021 5:04:19 PM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கருட பஞ்சமியையொட்டி கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதல் கருட சேவை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) கருட பஞ்சமியையொட்டி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கிறது.

 அதைத்தொடர்ந்து 2-வது கருட சேவை நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியையொட்டி வருகிற 22-ந்தேதி நடக்கிறது. மேற்கண்ட இரு கருட சேவை நிகழ்ச்சிகளில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory