» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டின் நன்மைக்காக ரிஸ்க் எடுக்க அரசு தயாராக உள்ளது.: பிரதமர் மோடி பேச்சு

வியாழன் 12, ஆகஸ்ட் 2021 3:36:49 PM (IST)

நாட்டின் நன்மைக்காக ரிஸ்க் எடுக்க அரசு தயாராக உள்ளதுஎன பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் நரேந்திர கானொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "நாங்கள் தைரியமாக பல முடிவுகளை எடுத்துள்ளோம். பெருந்தொற்று காலத்தில் கூட நாங்கள் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். நிர்பந்தத்தின் காரணமாக அரசு சீர்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை. நம்பிக்கையின் காரணமாக சீர்திருத்தங்களை மேற்கொண்டது.

சீர்திருத்தங்களின் காரணமாக இந்தியாவில் அன்னிய நேரடி மூதலீடு அதிகரித்துள்ளது. தற்போது இந்தியர்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களையே வாங்க விரும்புகிறார்கள். அதை தயாரிக்கும் நிறுவனத்தின் பின்புலம் பற்றியெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. நாட்டின் நன்மைக்காக ரிஸ்க் எடுக்க அரசு தயாராக உள்ளது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது. தொழிற் துறையினரும் தங்களது ரிஸ்க் எடுக்கும் பசியை பெருக்கிக் கொள்ள வேண்டும். நமது தொழிற் துறையினர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நான் எப்போதும் தயாராக உள்ளேன். தொழில்துறையினரின் பரிந்துரைகளை கேட்கவும் எப்போதும் தயாராக உள்ளேன்  என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory