» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

சனி 31, ஜூலை 2021 8:50:05 AM (IST)

கரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு மாா்ச் மாதத்தில்கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் உலக அளவில் கரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்தது. எனினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ‘ஏா் பபுள்’ விதிகளைக் கடைப்பிடித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory