» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய சட்டத்தை மதிக்காத சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்க கூடாது: சி.பி.ஐ. எதிர்ப்பு

வியாழன் 29, ஜூலை 2021 12:42:42 PM (IST)

இந்திய சட்டத்தை மதிக்காத சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று சி.பி.ஐ. உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

நீண்ட நாட்களாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன், கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். சோட்டா ராஜன் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 70 வழக்குகள் வரை நிலுவையில் இருக்கின்றன. இவர் தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் ஓட்டல் ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் அவருக்கு மோக்கா சட்டத்தின் கீழ் 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இடைக்கால ஜாமீன் வழங்க கோரி அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், "நான்(சோட்டா ராஜன்) இந்த வழக்கில் குற்றச்சதி பிரிவால் மட்டும் தண்டிக்கப்பட்டு உள்ளேன். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜாமீனில் வெளியே சென்றுள்ளனர். எனக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் எழுதும் இல்லை. 2 பேரின் வாய்வழி சாட்சியங்கள் மட்டுமே உள்ளன.  இவ்வாறு அவர் கூறிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனுஜா பிரபுதேசாய் தலைமையிலான ஒற்றை நீதிபதிகள் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.   

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது: சோட்டா ராஜனுக்கு " இசட் பிளஸ் பாதுகாப்பு அச்சுறுத்தல்” உள்ளது. மேலும் அவருக்கு இந்திய சட்டத்தின் மீது எந்த மரியாதையும் இல்லை. அவர் பல்வேறு நாடுகளுக்கு தப்பி ஓடியவர். போலி பெயர் மற்றும் போலி பாஸ்போர்ட்டுடன் பயணித்து வந்தார். அதுமட்டுமின்றி அவருக்கு எதிராக 14 முதல் 15 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவர் 12 வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் ஒன்றில் ஆயுள் தண்டனையும் கிடைத்துள்ளது என்று வாதாடினார்.  இந்த மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory